உலக செய்திகள்

வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லா ட்ரோன் தாக்குதல்

Desktop Image Mobile Image

இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு இன்று பயங்கரமான ஆளில்லா விமானத் தாக்குதலை (Drone Attack) நடத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவால் ஏவப்பட்ட தற்கொலைப்படை ட்ரோன் ஒன்று, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகளையும் (Sirens) மீறி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.

 

 

இந்த ட்ரோன் விழுந்து வெடித்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. குறைந்தது ஒரு வாகனம் முற்றிலும் உருக்குலைந்து தீக்கிரையானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கித் தனது ‘ஆற்றல் வற்றாத’ ட்ரோன்களை ஹிஸ்புல்லா ஏவி வருகிறது.

Related Articles

Back to top button