உலக செய்திகள்தொழில்நுட்பம்

நாசாவை அதிர்ச்சியடைய வைத்த ரொக்கெட் வெடிப்பு

Desktop Image Mobile Image

அமெரிக்காவின் Kennedy Space Center-இல் அமைந்துள்ள விண்வெளி ஏவுதளத்தில் நடைபெற்ற சோதனையின் போது ரொக்கெட் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jeff Bezos-க்கு சொந்தமான Blue Origin நிறுவனத்தின் “New Glenn” ரொக்கெட் நேற்று (28) இரவு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வெடித்ததாக NASA தெரிவித்துள்ளது.

சுமார் 98 மீட்டர் நீளமுள்ள இந்த ரொக்கெட், Amazon நிறுவனத்தின் LEO பிராட்பேண்ட் நெட்வொர்க்கிற்காக 78 செயற்கைக்கோள்களை ஜூன் 4ஆம் திகதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 

 

இந்த விபத்து குறித்து ஜெஃப் பெசோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவத்தில் எந்த பணியாளருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். மேலும், “இது மிகவும் கடினமான நாள். இருப்பினும், தேவையான அனைத்து சீரமைப்புகளையும் மேற்கொண்டு மீண்டும் விண்வெளிப் பயணத்தை தொடங்குவோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“New Glenn” ரொக்கெட்டை ஏவுவதற்காக உருவாக்கப்பட்ட உலகின் ஒரே ஏவுதளம் LC-36 ஆகும். தற்போது அந்த தளம் சேதமடைந்துள்ளதால், அதை மீளமைக்கும் வரை Blue Origin நிறுவனம் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 

இதனிடையே Elon Musk-ன் SpaceX மற்றும் Starlink சேவைக்கு போட்டியாக கருதப்பட்ட LEO நெட்வொர்க் திட்டத்திற்கும் இந்த விபத்து பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button