உலக செய்திகள்
ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பாதை வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்திற்கு இரு பக்கங்களிலிருந்தும் ஏற முடியும்.
முன்னதாக நேபாளப் பாதை வழியாக ஒரே நாளில் 223 பேர் சிகரத்தை அடைந்து இருந்ததே சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



