உள்நாடு

மொனராகலையில் SLTB பேருந்து விபத்து – 26 பேர் காயம்

Desktop Image Mobile Image

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் Sri Lanka Transport Board-க்கு சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

இந்த விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button