சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமானார் கைது!

மட்டக்களப்பு(Batticaloa)- காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த  மாமானார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(20.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த சிறுவனின்  தந்தை வெளிநாட்டில் உள்ள காரணத்தால் அவரின் உறவினரான மாமாவின் வீட்டிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதர்கள் சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வருவது வழமை.

 

 

அத்துடன் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா பணத்தை மாமானார் ஊடாக தந்தையார் அனுப்பி அதனை வழங்கி வருகின்றார்.

இதன் காரணமாக குறித்த சிறுவன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமானார் சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் சேட்டை செய்ய முயற்சித்துள்ளார்.

 

 

தனை தொடர்ந்து மீண்டும் கடந்த 27 ஆம் திகதி மாமானார் வீட்டுக்கு சென்ற சிறுவனிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்துள்ளார்

இது தொடர்பாக குறித்த சிறுவன் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி 1990 என்ற அவசர சேவைக்கு முறைப்பாடு செய்தனர்.

 

இதனையடுத்து பொலிஸார் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

 

இந்த நிலையில் குறித்த மாமானார் தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸார் நேற்று அவரை கைது செய்ததுடன் இன்று(21.1.2026) அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிகக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Back to top button