வாழைச்சேனையில் புதையல் தேடல்: 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (10.04.2026) அதிகாலை சிக்கியுள்ளனர்.

 

வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை, நுவரெலியா, உயாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரே விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

அத்துடன் பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனையில் புதையல் தேடல்: 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது

 

Related Articles

Back to top button