மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று மீண்டும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

 

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.26 சதவீத சரிவுடன் 4,786 டொலராகக் உள்ளதுடன், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் குறைந்து 78 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

 

இதேவேளை, சர்வதேச எரிசக்தி சந்தையிலும் மசகு எண்ணெய் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

இதற்கமைய, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 93 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 99 டொலர்களை அண்மித்த விலையில் விற்பனையாகின்றது.

எனினும், இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்து 2.67 டொலர்களாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button