ஜனநாயகன் படம் லீக்கான விவகாரத்தில் ஆறு பேர் கைது!

குறிப்பாக படக்குழுவினர் உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளானார்கள். யாரும் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து பார்க்க வேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டார்கள். இந்த மிகப்பெரிய தவறை செய்தவர்கள் கூடிய விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமும் கருத்து தெரிவித்தனர். ரஜினிகாந்த்முதல் கமல்ஹாசன் வரை அனைவரும் ஜனநாயகன் படத்திற்காக குரல் கொடுத்தார்கள்.
நடிகர் சங்கமும் இதுகுறித்து தங்களின் ஆதரவை ஜனநாயகன் படக்குழுவிற்கு வழங்குவதாக தெரிவித்தனர். இந்நிலையில் ஜனநாயகன் இணையத்தில் லீக்கானது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது.
விரைவில் கைது செய்யப்பட்ட ஆறு பேர்களின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனநாயகன் திரைப்படம் எந்த ID யிலிருந்து வெளியானது என்பது தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனவே கூடிய விரைவில் ஜனநாயகன் படத்தை கசியவிட்ட பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் முதலில் ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து ஒரு சில காட்சிகள் தான் இணையத்தில் கசிந்தது. அதுவே அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த காட்சிகள் எல்லாம் இணையத்தில் காட்டுத்தீபோல பரவியது. மேலும் ஒரு சில மணி நேரங்களில் ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. விஜய்போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தின் படம், ஐநூறு கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம், அதுவும் தளபதியின் கடைசி படம் திரையில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் லீக்கானல் அவரது ரசிகர்களுக்கு எப்படி இருக்கும் ?
இந்த விவகாரம் விஜய் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒட்டுமொத்த திரையுலகினரும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். தற்போது விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும் இருப்பதால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக உருவெடுத்திருக்கிறது.
எனவே விரைவில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாகவும் உள்ளது. மேலும் கூடிய விரைவில் படத்தை வெளியிட வேண்டும் என்பதும் விஜய் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. பொதுவாகவே விஜய் படங்கள் என்றாலே பல சர்ச்சைகள் சுற்றி இருக்கும். அதையெல்லாம் சமாளித்து தான் ஒவ்வொரு விஜய்யின் படங்களும் வெளியாகி வெற்றிபெற்று வருகின்றன. ஆனால் அதே பிரச்சனை அவரின் கடைசி படத்திற்கும் வர வேண்டுமா ? என்பது தான் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.
ஒரு சிலர் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் பார்த்துவிட்டு விமர்சனம் போடுவதெல்லாம் விஜய் ரசிகர்களை உச்சகட்ட அதிருப்தியில் ஆழ்த்திவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே கடந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாவதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ரிலீசுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்சார் பிரச்சனையால் இப்படம் தள்ளிவைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்றுவரை இப்படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில் முழு படமும் இணையத்தில் லீக்காகியுள்ளது. இவ்வாறு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வரும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இந்த சோதனைகளை எல்லாம் மீறி வெளியாகி சாதனை படைக்கும் என்பது தான் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.



