செய்திகள்இந்தியா

விஜய்யின் தேர்தல் பிரசாரப் பயணத்தில் விபத்து – பரபரப்பு தகவல்

Desktop Image Mobile Image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாகனத்தை தொடர்ந்து பின்னால் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துகுள்ளதை அடுத்து , பின்னால் வந்த ஏனைய உந்துருளிகளும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதியகளில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தூத்துக்குடியில் பிரசாரத்திற்கான பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

 

இந்த பயணத்தின் போது அவரது வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்து சென்ற உந்துருளி ஒன்று திடீரெனக் கீழே விழுந்ததை அடுத்து பின்னால் வந்த ஏனைய உந்துருளிகளும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

 

 

 

விபத்துச் சம்பவத்தின் போது விஜய் தனது வாகனத்தை நிறுத்தாமல் அவ்விடத்திலிருந்து கடந்து சென்றதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Back to top button