சுகாதார அமைச்சு தகவல்: இலங்கையர்களின் வாழ்நாள் நீடிப்பு

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

 

நாளை (24) முதல் ஆரம்பமாகும் உலக நோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

 

ஏப்ரல் 24 முதல் 30 வரை உலக நோய் எதிர்ப்பு வாரத்தைக் கொண்டாடுகிறோம். நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

 

 

கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது  என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button