வவுனியாஉள்நாடுவடக்கு மாகாணம்

வவுனியாவில் தளபதி விஜய்க்கு ஆதரவாக பிரம்மாண்ட பதாதைகள்

Desktop Image Mobile Image

தமிழக அரசியலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) என்ற புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு ஆதரவாக, இலங்கையின் வடமாகாணமான வவுனியாவில் ஆதரவுப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களால் இந்தப் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

 

 

தமிழகத்தில் விஜய் அரசியல் ரீதியாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக ஈழத்து மண்ணிலும் இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வருகைக்கு வாழ்த்து சினிமா எல்லைகளைத் தாண்டி, விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கும் விதமாக இந்தப் பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

 

நீண்டகாலமாக விஜய்க்கு இலங்கையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில், தற்போது அது அரசியல் ஆதரவாகவும் உருவெடுத்துள்ளதை இது காட்டுகிறது.

பண்டாரிக்குளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்தப் பதாதைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button