தங்கத்தின் விலை ஏற்றம் – சந்தையில் அதிர்ச்சி நிலை

இலங்கையில்(Srilanka) இன்று (02) ஒரு பவுண் தங்கத்தின் விலை 7000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 46,350 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
