வவுனியா மாவட்ட மட்டத்தில் வர்த்தக பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவி!

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவியான ஷாருணியா பழனியாண்டி ஆங்கில மொழி மூலமான வர்த்தக பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாவது நிலையினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்றயதினம் வெளியாகியிருந்தது.

வவுனியா மாவட்ட மட்டத்தில் வர்த்தக பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவி-Thamilan Win

இந்நிலையில் குறித்த மாணவி வர்த்தக பாடப்பரப்பில் மூன்று பாடங்களிலும் A சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

 

அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவிகளான குகன்ஜா ஜெநந்தராஜா இரண்டாம் நிலையினையும், அஸ்மிதா மெய்யழகன் மாவட்ட மட்டத்தில்  நான்காம் நிலையினையும் பெற்றுள்ளனர்

Related Articles

Back to top button