ஈரானில் இன்றிரவு முழு அழிவு – அமெரிக்க ஜனாதிபதி புதிய அறிவிப்பு

மீண்டெழ முடியாத அளவுக்கு ஈரானில் சம்பவங்கள் அரங்கேறுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக பதிவில் ஈரான் குறித்து டிரம்ப் மேலும் கூறியதாவது,

“இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும், அதை மீண்டும் ஒருபோதும் மீட்க முடியாது. அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அது அநேகமாக நடக்கும். இருப்பினும், இப்போது அங்கு மொத்தமான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது இதில் மாறுபட்ட, அறிவார்ந்த, மற்றும் தீவிரவாதம் குறைந்த சிந்தனையாளர்கள் மேலோங்கி இருப்பதால், ஒருவேளை புரட்சிகரமான அற்புதமான ஒன்று நடக்கலாம். யாருக்குத் தெரியும்? உலகின் நீண்ட வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்று இரவு நாம் அதைக் கண்டறிவோம். 47 ஆண்டுகால மிரட்டிப் பறித்தல், ஊழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும். ஈரானின் மக்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்!”

Related Articles

Back to top button