ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரானுக்கு ட்ரம்ப் நன்றி

லெபனானில் அமுல்படுத்தப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இன்று அறிவித்துள்ளார்.

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர்,

“ஈரான் கடற்பாதை (Strait of Iran) முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மிக்க நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்த 10 நாள் போர்நிறுத்தக் காலம் முழுவதும் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதை “முழுமையாகத் திறந்துவிடப்படும்” என அவர் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button