டிரம்ப் அறிவிப்பு: ஈரானைச் சூழ அமெரிக்க படைகள் – உலகளவில் பதற்றம்

அமெரிக்க படையினர் முற்றுகைக்கு தயாரான் நிலையில் ஈரானில் இருப்பார்கள் என டிரம்ப் அறிவித்துள்ளமை உலக நாடுகளுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கும், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள எதிரியை முழுமையாக அழிப்பதற்கும் தேவையான அனைத்து அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் இராணுவத்தினர் அந்தப் பிராந்தியத்திலேயே தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

 

உண்மையான உடன்படிக்கையின் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை இந்த இராணுவப் பிரசன்னம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அதோடு ஈரானுடன் எட்டப்பட்ட உண்மையான உடன்படிக்கை முழுமையாகச் நடைமுறைப்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறாது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ட்ரம்பின் நேரடி எச்சரிக்கை மத்திய கிழக்கில் மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Related Articles

Back to top button