T20-உலகக் கிண்ணம்: களத்திலிருந்து வெளியேறிய பத்திரண

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியின் இடைநடுவே களத்திலிருந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண வெளியேறியுள்ளார்.
போட்டியின் மூன்றாவது ஓவரை வீசும்போது நான்காவது பந்தை வீசிய பின்னர் இடது காலை பத்திரண பிடித்த நிலையில் அவர் பின்தொடை தசைநார் காயமடைந்தது போலத் தோன்றுகிறது. அவரது ஓவரை அணித்தலைவர் தசுன் ஷானக பூர்த்தி செய்திருந்தார்.


