ஈரான் மாலுமிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற விசேட விமானம் புறப்பட்டது

ஈரானின் கடற்படை கப்பல் தாக்குதலில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் ஒன்று ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
ஈரானிய Airbus A340 ரக விசேட விமானம் நேற்று இரவு 9.29 மணியளவில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விமானம் முதலில் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த மற்றொரு ஈரான் கடற்படை கப்பலான IRIS Lavan இல் இருந்த 183 ஈரானிய மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு, பின்னர் ஈரான் நோக்கிப் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த 84 மாலுமிகளின் உடல்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல இயலாததால், முதல்கட்டமாக 45 பேரின் உடல்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி சர்வதேசக் கடலில் நின்றிருந்த ஈரான் கடற்படை கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்ட தாக்குதலில் 84 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.




