10 வீடுகள் தீயில் எரிந்து சேதம்! தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம்

நுவரெலியா – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் நேற்று (15) மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

 

தன்போது தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித காயங்களுக்கும் ஏற்படாத போதிலும்; வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

 

அப்பகுதி மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைச் கொண்டாட சென்றிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயே 10 வீடுகளுக்கு பரவியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தோட்ட நிவர்வாகமும், கிராம சேவகர்கரும் இணைந்து சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button