வவுனியா லொறி நுவரெலியாவில் விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா குறுக்கு வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (28.03.2026) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்றுள்ளது.

 

வவுனியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு குழாய் கிணறு தோண்டும் பணிக்காக வந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

லொறியின் தடை செயலிழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து நேரத்தில் லொறியில் ஐந்து பேர் பயணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

அவர்களில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த விபத்தில் லொறிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button