கப் ரக வாகனம்; கோப்பாய் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் (Jaffna)- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனமானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி கந்தசுவாமி கோவில் சந்திப்பகுதியிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியது.

 

 

குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இன்று காலை வாகனத்தை மீட்ட கோப்பாய் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button