முல்லைத்தீவில் யுவதிகள் இருவர் துஸ்பிரயோகம்; மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது

முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு பெண்களும், போதகர் உள்ளிட்ட மூன்று ஆண்களும் வான் ஒன்றில் வீடு திரும்பினார்கள். பயணத்தின் நடுவில் யுவதிகளுக்கு குடிப்பதற்கு வைன் வழங்கியுள்ளனர்.

 

 

அதனை அருந்தியவர்கள் அரை மயக்கத்தில் இருக்கும் போது , காட்டு பகுதிக்கு வாகனத்தை கொண்டு சென்று, இரு யுவதிகளுடனும் போதகர் உள்ளிட்ட மூவரும் அத்துமீறி நடந்து, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் வீடு திரும்பிய இரு யுவதிகளும், நடந்த சம்பவம் தொடர்பில் பெற்றோரிடம் கூறியதை அடுத்து , இருவரையும் பெற்றோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 

 

அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடும் செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் போதகர் உள்ளிட்ட மூவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button