நோர்வூட் – மஸ்கெலியா முச்சக்கரவண்டி வீதியில் விபத்து!

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

20 அடி பள்ளத்தில்

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி இன்று மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button