இன்றைய ராசிபலன் – 26 ஜனவரி 2026

Today’s Horoscope – 26 January 2026

மேஷம்: அலைச்சலுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் யாரிடமும் கோபப்பட்டு பேசாதீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் இருக்கும். அதனால் ஆதாயமும் உண்டு. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

ரிஷபம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உடனான மனக் கசப்புகள் நீங்கும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொருட்கள் சேரும்.

மிதுனம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அலுவலகப்பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் வரும். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பண வரவு உண்டாகும்.

கடகம்: உங்கள் பேச்சில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதியவர்களுடன் நட்பு மலரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகனப் பழுது நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பேச்சில் பொறுமை தேவை.

 

சிம்மம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் இருந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. பழுதான மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தடைகள், இடையூறுகளைப் பொருட்படுத்தாமல், எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.

கன்னி: தேவையற்ற அச்சம், கவலை, குழப்பங்கள் வந்துபோகும். எக்காரியத்திலும் நிதானம் தேவை. யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பது சற்று தாமதமாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து உறவாடுவார்கள்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் விலகும். பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை குறையும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

விருச்சிகம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் சலசலப்புகள் ஓய்ந்து, மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். பெரியவர்கள், மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

 

 

தனுசு: பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வசூலாகும். திடீர் பயணத்தால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.

மகரம்: வீண், ஆடம்பர செலவுகளை தவிர்த்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக தீரும். உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.

கும்பம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் கவுரவம் கூடும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. எதிலும் நிதானம் அவசியம்.

மீனம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினர், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.

Related Articles

Back to top button