பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி – நால்வர் காயம்!

டயகம நட்போன் தோட்டப்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டயகம நகரத்தில் இருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையிலே நேற்று (22) இரவு 09 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

 

 

முச்சக்கர வண்டி சாரதி, பயணித்த மூவர் உட்பட நால்வர் காயமுற்ற நிலையில் டயகம பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

 

மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button