தங்க நகை அணிந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை

கேகாலை – தீவல வீதியின் எவுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7,58,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி பதுளையைச் சேர்ந்த 25 வயதுடைய பிள்ளையின் தாயார், ஹெட்டிமுல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டிருந்த தனது சகோதரரின் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம நபர் ஒருவரால் இவர் வழிமறிக்கப்பட்டுள்ளார்.

 

 

எவுங்கல்ல பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகையை வைத்து வீதியை மறைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளது.

Back to top button