பல கடைகள் சேதம்! கண்டியில் அதிகாலை பதற்றம்

கண்டி, மெனிகின்னா நகர மையத்தில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிட வர்த்தக வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பல கடைகள் சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்தில், துணிக்கடை, வீட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் காலணிகள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ பரவிய காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழப்பு அல்லது காயம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

