நீதிமன்றத்திற்கு கோட்டாபயவை முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்!!

பயங்கரவாத தடை சட்டத்தை ரத்துச் செய்யுமாறும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது இன்று(06.05.2026) யாழ்ப்பாண நகரில் இடம்பெற்றுள்ளது.

 

லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு காரணங்களை காட்டி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றுக்கு வருகை தராமை கண்டனத்துக்குரியது என்றும் அரசாங்கம் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

இதன்போது, பதாகைகளை தாங்கியவாறு பலத்த கோஷம் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில், யாழ்ப்பணத்தை மையப்படுத்திய சமூக உரிமை இயக்கம் மற்றும் தெற்கை மையப்படுத்திய சிங்கள சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

 

 

Related Articles

Back to top button