ஹோர்முஸ் வழி வர்த்தக அனுமதி கொண்ட 5 நாடுகள் – ஈரான் தகவல்கள்
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஈரான் பிரதான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.
மேலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணம் செய்ய அனுமதியில்லை என்று ஈரான் கூறியிருந்தது.
இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணையை கடக்க நட்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
நீரிணையை கடந்து செல்ல அனுமதி
அதன்படி, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பாக நீரிணையை கடந்து செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அர்காசி தெரிவித்துள்ளார்.




