எரிபொருள் வரிசையில் பதற்றம் வேண்டாம்- பொதுமக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை…!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், இலங்கை பொலிஸார்(Sri Lanka Police) பொதுமக்களுக்கு பொது அமைதியைப் பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வரிசைகளில் காத்திருக்கும் போது பதற்றமடைவதும் அல்லது மோதல்களில் ஈடுபடுவதும் எந்தவித தீர்வையும் அளிக்காது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

மேலும், இத்தகைய செயல்கள் தேவையற்ற தாமதங்களை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

எரிபொருள் நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

அதேவேளை, வரிசையை மீறிச் செல்ல முயற்சிப்பது அல்லது பிறரின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதியை குலைக்கும் நபர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

 

 

Related Articles

Back to top button