ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம்…!

ஈரான் மீது அமெரிக்கா விரைவில்  மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

பென்டகன்

இந்நிலையில் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து பரந்த அளவிலான தாக்குதல் நடத்துவதற்கான செயற்திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் பென்டகன் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், பென்டகன் உயர் அதிகாரிகளுடன் இன்று (13) ட்ரம்ப் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்தாண்டு ஜூன் மாதம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணு சக்தி மறைவிடங்களைக் குறிவைத்து அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் நடத்திய தாக்குதலை விட மிகப்பெரிய அளவிலான தாக்குதலை தற்போது நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button