வவுனியா- பொலிஸாரால் நத்தார் குடில் திறந்து வைப்பு

நத்தார் பண்டிகையை ஒட்டி வவுனியா பொலீஸ் தலைமையகத்தில் வவுனியா அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலிமாவினால் நத்தார் பாலகன் குடிலில் வைக்கப்பட்டு நத்தார் ஆராதனைகள் இடம்பெற்று நத்தார் கொண்டாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
வவுனியா சமுதாய பொலீஸின் ஏற்பாட்டில் கிராமிய சமுதாய பொலீஸ் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் உதவி பொலீஸ் அத்தியட்சகர் என்.எம்.திசாநாயக, வவுனியா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரஜீத் சுரங்க வீரத்தன உட்பட சமுதாய போலீஸ் பொறுப்பதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு குழு முக்கியஸ்தர்களின் பங்கு பெற்றலோடு இந்த நிகழ்வு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




