இன்றைய ராசிபலன்-மேஷம் முதல் மீனம் வரை

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபார சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: இங்கிதமாகப் பேசுவது நல்லது. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர். பிள்ளைகளால் பெருமையடைவீர். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.

கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். தந்தையின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். புது பொறுப்பு, பதவி தேடி வரும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்.

கும்பம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களின் கனவு நினைவாகும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த பகை நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகள் முடியும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை ஏற்றுக் கொள்வீர்.

Related Articles

Back to top button