தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று  2,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளமை நுகர்வோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button