போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துநர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (6) மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்வில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

இதன்போது, புதிதாக நியமிக்கப்பட்ட பெண் பேருந்து நடத்துனர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.

Related Articles

Back to top button