வடக்கு மாகாணம்

யாழில் ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்திற்கு அதிர்ச்சி! கரப்பான் பூச்சி நூடில்ஸ்

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் (Jaffna)- கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

குடும்பம் ஒன்று நேற்றையதினம் குறித்த உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸில் கரப்பான்பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் குறித்த விடயத்தை ஹோட்டல் பணியாளர்களுக்கு எடுத்துக் கூறியபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இச் சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button