ஜோதிடம்

இன்றைய ராசிபலன்- 03 பிப்ரவரி 2026

மேஷம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் கூடும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

ரிஷபம்: பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சென்ற ஆன்மிக பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பங்கள் தீர்ந்து அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான செலவு இருக்கும். சகோதர வகையில் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு கூடும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

துலாம்: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். அலுவலகத்தில் அடுத்தவர் பற்றி தலைமையிடத்தில் குறை கூறுவதை தவிர்ப்பீர்.

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிட்டும். மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்.

தனுசு: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிட்டும். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.

மகரம்: அலைச்சல், காரியத்தடை வரும். பிள்ளைகளின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் கூடுதல் நேரம் பணி புரிய வேண்டி இருக்கும். மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பகை விலகும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.

மீனம்: முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

Related Articles

Back to top button