வானிலை எச்சரிக்கை: மன்னார், வவுனியாவில் இடியுடன் கூடிய மழை!

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (13) இரவு 11.00 மணிவரை அமுலில் இருக்கும் வகையில் நன்பகல் குறித்த வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது,
கடுமையான மின்னல்
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய,வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்படும்.
அத்துடன் இன்று பிற்பகல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வெப்ப காலநிலையில் மழையை எதிர்ப்பார்த்திருக்கும் மக்களுக்கு மழை ஓர் விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.




