உள்நாடு

இலங்கையில் நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிரடி உயர்வு!!

Desktop Image Mobile Image

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ்  நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விலைகளில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைய, லாஃப்ஸ் நிறுவனம் தனது எரிவாயு கொள்கலன்களின் விலையை உயர்த்த தீர்மானித்துள்ளது.

இதன்படி: 12.5 கிலோகிராம் 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 5,700 ரூபாவாக காணப்பட்ட இதன் புதிய விற்பனை விலை 6,245 ரூபாவாகும்.

5 கிலோகிராம் 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 2,280 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 2,500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

இதன்படி 12.5 கிலோகிராம்: 4,765 ரூபாய். 5 கிலோகிராம்: 1,910 ரூபாய். 2.3 கிலோகிராம்: 890 ரூபாய்.

இந்த திடீர் விலை உயர்வு காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நுகர்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

 

 

இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button