அமைதியான உலகத்தை ஏற்படுத்த தேவையான அர்ப்பணிப்பு:ஜனாதிபதியின் விசேட செய்தி

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் சமாதானமான உலகத்திற்காக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது. இந்த போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்காக ஒன்றுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் போர் அனைத்து மக்களுக்கும் பாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

 

 

அதிலிருந்து இலங்கை மட்டும் தப்ப முடியாது. இந்தப் போரின் காரணமாகப் பல முக்கியப் பகுதிகள் எம்மைப் பாதிக்கும். எண்ணெய் மற்றும் எரிவாயு நேரடியாக பாதிக்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவிலான இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் உள்ளன. பணம் அனுப்புவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

 

அமைதியான உலகத்திற்கான சர்வதேச அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே இதை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button