அதிகரித்த எரிபொருள் விலை!வெளியான அறிவிப்பு….!

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28.2.2026) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

 

 

அதேநேரம் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை 95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. 340 ஆகவும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை ரூ. 182 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.

Related Articles

Back to top button