2 வயதில் கின்னஸ் சாதனை சிறுவன்!

இரண்டு வயது சிறுவன் ஜூட் ஓவன்ஸ், ஸ்னூக்கர் மற்றும் பூல் விளையாட்டில் அபார திறமை வெளிப்படுத்தி, கின்னஸ் உலக சாதனை ஒன்றை அல்ல, இரண்டை ஒரே நேரத்தில் படைத்துள்ளார்.

அதீத கவனம், கை-கண் ஒருங்கிணைப்பு மற்றும் இயல்பான திறமை காரணமாக ஜூட்டின் இந்த சாதனை உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மான்செஸ்டரில் பிறந்த ஜூட், கடந்த அக்டோபர் 12, 2025 அன்று 2 வயது 302 நாட்களில் ஒரு பூல் பேங்க் ஷாட் (Bank Shot) ஐ வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

இதற்கு முன்பு, 2 வயது 261 நாட்களில், அவர் ஒரு ஸ்னூக்கர் டபுள் பாட் ஷாட் (Double Pot Shot) ஐ வெற்றிகரமாக செய்து முடித்திருந்தார்.

2 வயதில் கின்னஸ் சாதனை சிறுவன்/Guinness World Record boy at 2 years old

இதன் மூலம், இரண்டு தந்திர (Trick) ஷாட்களை நிகழ்த்திய இளைய நபர் என்ற சாதனையை ஜூட் அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளார்.

மேலும், கின்னஸ் உலக சாதனை வரலாற்றில் இளைய இரட்டை சாதனையாளர்களில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்துள்ளார்.

“இவ்வளவு குறுகிய காலத்தில் ஜூட் இத்தனை சாதித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒன்று அல்ல, இரண்டு உலக சாதனைகள் – இதைவிட உச்சம் வேறெது?” என ஜூட்டின் தந்தை லூக் ஓவன்ஸ் தெரிவித்தார்.

 

 

ஜூட்டின் இயல்பான திறமையை குடும்பத்தினர் முதலில் வீட்டிலேயே கவனித்ததாகவும், சிறுவயதிலேயே ஸ்னூக்கர் அவரது விருப்பமான பொழுதுபோக்காக மாறியதாகவும் அவர் கூறினார்.

 

 

“வயதைப் பொருட்படுத்தாமல் சாதனை அனைவருக்குமானது. ஜூட் போன்ற இளம் வயதில் இத்தகைய திறமை மற்றும் உறுதியை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என கின்னஸ் உலக சாதனைகளின் தலைமை ஆசிரியர் கிரெய்க் கிளென்டே தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button