இன்றைய ராசிபலன்-மேஷம் முதல் மீனம் வரை

மேஷம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கல்வியாளர், அறிஞர்கள் நட்பால் தெளிவு பெறுவீர். பூர்வீக சொத்து வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: எதிர்காலம் தொடர்பாக மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர். மனைவிவழியில் ஆதாயமுண்டு. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் சிறக்கும்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய கடனையை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

சிம்மம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். வீடு, வாகனத்தில் பழுதை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.

கன்னி: தொட்டது துலங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முன்கோபத்தை தவிர்த்து அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: சேமிப்புகள் கரையக் கூடும். கணவன் – மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உடன் பிறந்தவர்களால் செலவு உண்டு. அலுவலகத்தில் குழப்பங்கள் தீரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு கூடும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்ப்பீர்.

தனுசு: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எண்ணங்கள் ஈடேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

மகரம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் போட்டி விலகும்.

கும்பம்: கடந்த கால அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாதீர். You will commence efforts to reduce extravagant expenditures and begin saving. Joyful meetings with loved ones will enhance your well-being. Emotional strain with your spouse will alleviate. Your business is poised for profitability, and the workload at the office will diminish. It is advisable to refrain from allowing others to interfere in your matters.

Related Articles

Back to top button