இன்றைய ராசிபலன்-மேஷம் முதல் மீனம் வரை-24 ஏப்ரல் 2026

மேஷம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். தந்தைவழி உறவினர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: குழப்பம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணப் பற்றாக்குறையை சமாளிக்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். அமைதி காக்கவும்.
கடகம்: குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவுகள் வரும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
சிம்மம்: வர வேண்டிய பணம், நிலப்பட்டா கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பிள்ளைகள் எதிர்பார்த்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். பூர்வீக சொத்து பிரச்சினை தீரும். உங்களால் ஆதாயம் அடைந்த சிலர் உங்களை சந்திப்பார்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: உடன் பிறந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூர்வீக சொத்து பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்.
தனுசு: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். திட்டமிட்ட பணியை முடிக்க போராடுவீர். பழைய வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலக கோப்புகளை கவனமாக கையாளவும்.
மகரம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.
கும்பம்: பிரபலங்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.
மீனம்: முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். ஒருவருக்கொருவர் இருந்த ஈகோ நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.


