உள்நாடுயாழ்ப்பாணம்வடக்கு மாகாணம்

யாழில்-விஜயின் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் ; குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!!

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மது விருந்தில் பகிடிவதைக்கு உள்ளான குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிர் மாய்த்துள்ளார். தமிழக சட்ட மன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றியீட்டியுள்ளது.

 

அதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இளைஞர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் , நேற்றைய தினம் (05) கோண்டாவில் பகுதியில் உள்ள தனது நண்பர்களுக்கு விஜயின் வெற்றியை முன்னிட்டு விருந்து வழங்க போவதாக வீட்டில் கூறி விட்டு குடும்பஸ்தர் சென்றுள்ளார்.

 

 

கோண்டாவில் நண்பர்களுக்கு மது விருந்து வழங்கிய நிலையில் விஜய் தொடர்பில் பகிடிகள் ஆரம்பித்து , அதொரு வதையாக குடும்பஸ்தருக்கு கடும் மனஉளைச்சலை கொடுத்தமையால் , அவர் அங்கிருந்து கோண்டாவில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்று தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக , மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விஜயின் வெற்றியின் சந்தோஷமான விருந்து கொண்டாட்டம் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button