அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்

அமெரிக்க போர் விமானங்களைச் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது. கொமெய்னி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

வான் பாதுகாப்பு அமைப்பு

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவின் நட்பு நாடான குவைத்தின் வான் பரப்பில் அமெரிக்காவின் எஃப் – 15 போர் விமானங்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த விமானங்களை எதிரி நாட்டு ஊடுருவல் எனத் தவறுதலாக நினைத்து குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு இன்று (02) சுட்டு வீழ்த்தியிருப்பதாக அமெரிக்க இராணுவத்தால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

 

அமெரிக்க விமானப்படையின் எஃப் – 15 போர் விமானங்களில் இருந்த வீரர்கள் குழு பாராசூட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் பத்திரமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button