பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை ! முந்திச்செல்ல முயன்றதால் நடந்த விபரீதம்

வீதியில் முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச்  சம்பவம் நேற்று மதியம்  எத்கால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கம்பளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் கம்பளை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

 

எனினும், சிகிச்சை பலனின்றி 3 வயதுடைய பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது .

Related Articles

Back to top button