திருமலையில் முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து!!

திருகோணமலை(Trincomalee) பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று அதிகாலை பேக்கரி உற்பத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காலை நேர வியாபாரத்திற்காகச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

 

 

​இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

 

காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை போக்குவரத்துப் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Related Articles

Back to top button