7 உயிர்களைப் பலியெடுத்த சட்டவிரோத மதுபானம்!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 8 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண் சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரு பெண்களும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம் மாதம் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



