மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள் மீட்பு

மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இந்த மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



